நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளியில்16ம் ஆண்டு விழா கொண்டாட்டம்



நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளியில்16ம் ஆண்டு விழா கொண்டாட்டம்


நாமக்கல்,: நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளியின், 16ம் ஆண்டு விழா கோலாகலமாக நடந்தது. பள்ளி தலைவர் சரவணன் தலைமை வகித்தார். சாணக்யா வலையொலி நிறுவனர் ரங்கராஜ் பாண்டே சிறப்பு விருந்தனராக பங்கேற்றார்.
அவர் மாணவர்களிடையே பேசியதாவது: மாணவர்கள், தாங்கள் விரும்பும் துறையை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். எதிர்கால கனவுகளுக்கு, பள்ளியில் படிக்கும்போதே விதை துாவ வேண்டும். தங்கள் நோக்கத்தை தேர்ந்தெடுத்து, அதைநோக்கி தங்களுடைய பயணத்தை அமைத்துக்கொள்ள வேண்டும். பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். தங்கள் குழந்தைகளின் கனவுகளுக்கு முக்கியத்துவம் அளித்து, அவர்களுடன் கலந்துபேசி மனித மாண்புகளையும், நல்லொழுக்கங்களையும் கற்றுத்தர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்று, ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., உள்ளிட்ட பல உயர் கல்வி நிறுவனங்களில் பயிலும் முன்னாள் மாணவர்கள், சி.பி.எஸ்.இ., வாரியத்தேர்வில், 100க்கு, 100 மதிப்பெண் பெற்ற மாணவர்கள், கலை, அறிவியல் மற்றும் விளையாட்டுத்துறையில் மாவட்ட, மாநில அளவில் சாதனை படைத்த மாணவர்கள் ஆகியோருக்கு பதக்கம், சான்றிதழ், விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

Advertisement