கலசலிங்கம் பல்கலையில் பொங்கல் விழா

ஸ்ரீவில்லிபுத்துார் : கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் தமிழ் மன்றம் மற்றும் விசாக மன்றம் சார்பில் பொங்கல் விழா நடந்தது.

வேந்தர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சசிஆனந்த், துணைவேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன் ஆகியோர் பொங்கல் பானை மற்றும் மாடுகளுக்கு பூஜைகள் செய்து விழாவினை துவக்கி வைத்தனர்.

பேராசிரியர்கள், மாணவர்கள் பொங்கலிட்டனர். விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு துணைத்தலைவர் சசிஆனந்த் பரிசு வழங்கினார்.

விழா ஏற்பாடுகளை விசாக மன்ற ஒருங்கிணைப்பாளர் அமர்நாத் ரெட்டி, தமிழ் மன்ற ஒருங்கிணைப்பாளர் சங்கீதா, மாணவர்கள் ஒருங்கிணைப்பாளர்கள் தருண் சாய், செல்வி மேனகா செய்திருந்தனர்.

Advertisement