ராமேஸ்வரம் கோயிலில் நடிகர் செந்தில் தரிசனம்

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நடிகர் செந்தில், அவரது மனைவி கலைச்செல்வி உடன் சுவாமி தரிசனம் செய்தார்.

நேற்று ராமேஸ்வரம்கோயிலுக்கு நடிகர் செந்தில், மனைவியுடன் வருகை தந்தார். இவரை கோயில் ஊழியர்கள் வரவேற்றனர்.

பின் கோயிலில் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் இருவரும் சுவாமி தரிசனம் செய்தனர். பின் செந்தில் கோயில் 3ம் பிரகாரம், சிற்பங்கள், கட்டடக் கலைகளை கண்டு ரசித்தார். பின் காரில் மதுரை சென்றார்.

Advertisement