செயற்குழுக் கூட்டம்

மேலுார் : மேலுாரில் ஓய்வூதியர்கள் நலச்சங்க செயற்குழுக் கூட்டம் தலைவர் தமிழையா தலைமையில் நடந்தது. செயலாளர் ஸ்ரீகண்டன் மாதாந்திர, பொருளாளர் ஆதி சிவன் வரவு செலவு அறிக்கை வாசித்தனர். செயல் தலைவர் மணி, துணைத் தலைவர் சிதம்பரம் சங்கத்திற்கு அரசு கட்டடம் பெறுவது, புதிய உறுப்பினர் சேர்க்கை, நிதி நிலைமையை மேம்படுத்துவது குறித்து பேசினர்.

ஹார்ட் புல்நெஸ் தியான மைய பயிற்சியாளர்கள் ஜெயலட்சுமி, ஜெகநாதன் தியான பயிற்சி அளித்தனர். அனைத்து ஓய்வூதியர்களுக்கும் பொங்கல் பரிசு தொகை வழங்க வேண்டும், 60 வயது முதல் ஓய்வூதியத்தை ஒவ்வொரு சதவீதம் ஒவ்வொரு ஆண்டும் உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இணைச்செயலாளர் சுந்தரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement