திருப்புல்லாணியில் கூடாரவல்லி உற்ஸவம்

திருப்புல்லாணி : திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் கூடாரவல்லி உற்ஸவம் நடந்தது.

இக்கோயிலில் நேற்று முன்தினம் வைகுண்ட ஏகாதிசையை முன்னிட்டு பகல் பத்து உற்ஸவம் நிறைவு பெற்று ராப்பத்து உற்ஸவம் நடக்கிறது.

திருப்பாவையின் 27வது பாசுரத்தில் 'கூடாரவல்லி வெல்லும் சீர் கோவிந்தா' என ஆண்டாள்குறிப்பிடுகிறார். மார்கழி பாவை நோன்பில் இருந்து வழிபட்டால் திருமாலின் திருவருளை பெற முடியும் என்பதற்காக மார்கழி மாதத்தின் இறுதியில் பாவை நோன்பினை நிறைவு செய்யும் நாளை கூடாரவல்லி தினம் என அழைக்கிறோம்.

இந்த நாளில் பல வகையான இனிப்புகள் பொங்கல், அக்கார அடிசில், நெய், வெண்ணெய் உள்ளிட்டவைகள் பெருமாளுக்கு நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு நேற்று திருப்புல்லாணியில் ஆண்டாள் சன்னநிதியில் பூஜைகளும், விசேஷ திருமஞ்சனமும், சாற்றுமுறை கோஷ்டி பாராயணம் உள்ளிட்டவை நடந்தது.

Advertisement