கரும்பு விவசாயி மகிழ்ச்சி
உசிலம்பட்டி : உசிலம்பட்டி அருகே கள்ளபட்டியைச் சேர்ந்தவர் பாண்டி 58. விவசாயியான இவர் உசிலம்பட்டி சந்தையில் காய்கறி கடை நடத்தி வருகிறார். பொங்கலுக்கு வெளியூர்களில் இருந்து கரும்பு வாங்கி வந்து வியாபாரம் செய்தார்.
சோதனை ரீதியாக அவரது தோட்டத்திலும் கரும்பு பயிரிட்டுள்ளார். நல்ல லாபம் கிடைக்கவே, இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு அறுவடைக்கு வரும் வகையில் கருப்பு கரும்பு பயிரிட்டுள்ளார்.
நன்கு வளர்ந்துள்ள கரும்பினை வியாபாரிகள் நேரடியாக வந்து தோட்டத்திலேயே அறுவடை செய்து எடுத்துச் செல்கின்றனர். 15 எண் கொண்ட கரும்பு கட்டுக்கு ரூ. 450 முதல் ரூ.500 வரை விலை கிடைப்பதால் ஏக்கருக்கு ரூ.ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் லாபம் கிடைத்துள்ளது என தெரிவித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement