பொங்கல் கரும்பு அறுவடை அருப்புக்கோட்டையில் தீவிரம்

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை பகுதிகளில் பொங்கல் பண்டிகைக்கு 2 நாட்கள் உள்ள நிலையில் கரும்பு அறுவடை தீவிரமாக நடந்து வருகிறது.

அருப்புக்கோட்டை அருகே புலியூரான், வடபாலை, தென்பாலை, செம்பட்டி பகுதிகளில் பொங்கல் கரும்பு விவசாயம் பாரம்பரியமாக நடக்கிறது.

புலியூரான் கரும்பிற்கு வியாபாரிகளிடம் நல்ல கிராக்கி உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு 2 நாட்கள் உள்ள நிலையில் விவசாயிகள் கரும்பு அறுவடை பணியில் தீவிரமாக உள்ளனர்.

கரும்புகளை கட்டுகளாக கட்டி அருப்புக்கோட்டையின் பல பகுதிகளில் விற்பனைக்கு கொண்டு வருவர்.

இதுகுறித்து விவசாயிகள், போன மாதம் அடித்த பலத்த காற்றில் விளைந்த கரும்புகள் சாய்ந்து விட்டது.

இருப்பினும் காற்றிற்கு தப்பித்த கரும்புகளை பொங்கல் பண்டிகைக்கு அறுவடை செய்யும் பணியில் உள்ளோம்.

அரசு பொங்கல் பண்டிகைக்கு கரும்புகளை அந்தந்த தாலுகாக்களை சேர்ந்த கிராமங்களில் தான் வாங்க வேண்டும் என உத்தரவிட்டும் எங்களிடம் கரும்புகளை வாங்காமல் வெளியூர்களுக்கு சென்று கொள்முதல் செய்கின்றனர்.

கரும்பு விவசாயத்தை அரசு பாதுகாக்க வேண்டும்.

Advertisement