கோலப்பொடி விற்பனை சுறுசுறு

கோலப்பொடி விற்பனை சுறுசுறு


ஈரோடு, : நாளை மறுதினம் தமிழகம் முழுவதும் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்படவுள்ளது. விழாவையொட்டி தொடர்ச்சியாக வீட்டு வாசலில், பெண்கள் வண்ண கோலமிடுவர்.
இதை முன்னிட்டு ஈரோட்டில் கொங்காலம்மன் கோவில் வீதியில், வண்ண கோலப்பொடி விற்பனை சூடுபிடித்துள்ளது. 100 மற்றும் 150 கிராம் கொண்ட பாக்கெட், 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதேபோல் மாநகரின் பல்வேறு பகுதிகளில் விற்பனைக்கு கரும்பு கொண்டு வரப்பட்டு குவித்து வைக்கப்பட்டுள்ளது. ஜோடி, 80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

Advertisement