நின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் காயம்
தொண்டி : மதுரையிலிருந்து கரும்புகளை ஏற்றிக் கொண்டு தொண்டிக்கு சென்ற லாரி, நம்புதாளை அருகே நிறுத்தபட்டிருந்தது.
நேற்று அதிகாலை 4:30 மணிக்கு துாத்துக்குடியிலிருந்து வேளாங்கன்னியை நோக்கி சென்ற கார், நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. இதில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த துாத்துக்குடி பனிமயசாந்தி 39, கணவர் ஆரோக்கியஜெயசீலன் 45, மற்றும் குடும்பத்தார்கள் ஜேசுஅடிமை, ஜோசப், ராசுஅம்மாள் ஆகியோர் காயமடைந்தனர். அனைவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement