' தினமலர் - பட்டம்' இதழ் வினாடி வினா போட்டி

விழுப்புரம் : புதுச்சேரி 'தினமலர் -பட்டம்' இதழ், ஆச்சார்யா கல்வி குழுமம் சார்பில் பதில் சொல்: பரிசு வெல், வினாடி வினா போட்டி, விழுப்புரம் தூய இருதய மத்திய (சி.பி.எஸ்.இ.,) மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.

விழுப்புரம் துாய இருதய மத்திய (சி.பி.எஸ்.இ) பள்ளியில் நடந்த வினாடி வினா போட்டியில் 100 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். பிறகு அதில் 16 மாணவ, மாணவிகள் தேர்வு செய்து, 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு, நிறைவாக 2 சுற்றுகளாக போட்டி நடந்தது. பள்ளி முதல்வர் அருட்சகோதரி சுசீலா தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர்.

இந்த போட்டியில் 4ம் வகுப்பு மாணவர்கள் வருண்முரளிதரன், சங்கமித்ரா அணி முதலிடத்தையும், 9ம் வகுப்பு மாணவர்கள் கேசவராம், கோகுல் அணி இரண்டாமிடத்தையும் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, அப்பள்ளியின் தாளாளர் அருட்சகோதரி வசந்தா, பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Advertisement