இந்த வாரத்தில் வெளிவரும் ஐ.பி.ஓ.,
லக்ஷ்மி டென்டல்: மும்பையை தலைமையிடமாகக் கொண்ட லக்ஷ்மி டென்டல், புதிய பங்கு வெளியீடு வாயிலாக 698 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட முன்வந்துள்ளது.
ஏற்கனவே தன் முதலீட்டாளர்கள் வசமுள்ள பங்குகள் விற்பனை வாயிலாக 560 கோடி ரூபாயும், புதிய பங்குகள் விற்பனை வாயிலாக 138 கோடி ரூபாயும் திரட்ட உள்ளது. இன்று முதல் நாளை மறுநாள், ஜன.,13 -- - 15 வரை முதலீட்டாளர்கள் பங்குகள் கேட்டு விண்ணப்பிக்கலாம். ஒரு பங்கின் விலை 407- - 428 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
காப்ரா ஜூவல்ஸ்: குஜராத்தின் ஆமதாபாதை சேர்ந்த காப்ரா ஜூவல்ஸ் நிறுவனம், கே.கே.,ஜூவல்ஸ் என்ற பெயரில் தங்கம், வெள்ளி மற்றும் வைர ஆபரணங்கள் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. புதிய பங்கு வெளியீடு வாயிலாக 40 கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ள இந்நிறுவனம், முற்றிலும் புதிய பங்குகளை விற்பனை செய்ய உள்ளது. வருகிற 15- முதல் 17ம் தேதி வரை பங்குகள் வாங்க விண்ணப்பிக்கலாம். ஒரு பங்கின் விலை 121- - 128 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இ.எம்.ஏ., பார்ட்னர்ஸ்: மும்பையைச் சேர்ந்த இ.எம்.ஏ., பார்ட்னர்ஸ், புதிய பங்கு வெளியீடு வாயிலாக 76 கோடி ரூபாயை திரட்ட உள்ளது.
இதில், 53.34 லட்சம் புதிய பங்குகள் விற்பனை மற்றும் ஏற்கனவே முதலீட்டாளர்கள் வசமுள்ள 7.96 பங்குகள் விற்பனையும் அடங்கும். வரும் 17- முதல் 21ம் தேதி வரை பங்குகள் வாங்க விண்ணப்பிக்கலாம். ஒரு பங்கின் விலை 117 - 124 ரூபாயாக நிர்ணயித்து உள்ளது.