அரசு மருத்துவமனையில் ஆய்வு  

பண்ருட்டி : பண்ருட்டி அரசு மருத்துவமனையில் மாவட்ட இணை இயக்குனர் ஹரியன்ரவிக்குமார் நேற்று ஆய்வுசெய்தார்.

பண்ருட்டி அரசு மருத்துவமனையில் மாவட்ட இணை இயக்குனர் ஹிரியன் ரவிக்குமார் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது மருத் துவர் சிகிச்சை பற்றிய ஆவணங்களை ஆய்வு செய்தார்.

பின்னர் மருத்துவமனைக்கு வந்த நோயாளிம், தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளிடமும் நோய்கள் குறித்தும், டாக்டர்கள் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.

இதைத்தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு பிரிவு, காச நோய் சிகிச்சை பிரிவு மற்றும் மருந்து கிடங்கு ஆகிய இடங் களிலும் ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது தலைமை டாக்டர் மகேஸ்வரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement