சண்முக நதியில் பாதுகாப்பு

பழநி -: பழநி முருகன் கோயிலுக்கு பாதயாத்திரை பக்தர்களின் வருகை அதிகரித்தது.

இந்நிலையில் பக்தர்கள் இடும்பன் குளம்,சண்முக சண்முக நதி பகுதிகளில் குளித்து நீராடிய பின் கோயில் சென்று சுவாமி தரிசனம் செய்வர்.

பக்தர்களின் வருகை அதிகரித்ததால் நீர் நிலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பழநி தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் காளிதாஸ் தலைமையில் செய்கின்றனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு படை வீரர்கள் கயிறு, ரப்பர் படகு, லைப் ஜாக்கெட் உள்ளிட்ட பொருட்களுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

Advertisement