'40 சதவீதம் வேட்டி, சேலை தான் வந்துள்ளது'
அன்னுார்; கடந்த 10ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் வேட்டி சேலை வழங்கும் பணி துவங்கியது. முதல் நாளன்று (10ம் தேதி) பெரும்பாலான கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் வேட்டி, சேலை வழங்கப்பட்டது. இரண்டாம் நாள் அக்கரை செங்கப்பள்ளி, பசூர், வெள்ளமடை ஊராட்சிகளில் வேட்டி சேலை வழங்கப்படவில்லை.
நேற்று அன்னூர் பேரூராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் வேஷ்டி மட்டும் வழங்கப்பட்டது. சேலை வரவில்லை. வந்தால் தருகிறோம்,' என்றனர்.
இதுகுறித்து ரேஷன் கடை விற்பனையாளர்கள் சிலர் கூறுகையில், '1,000 ரேஷன் கார்டு உள்ள கடைகளுக்கு 400 கார்டுகளுக்கு மட்டுமே வேட்டி சேலை வந்துள்ளது. சில கடைகளில் 400 பேருக்கு மட்டும் கொடுத்துள்ளனர். சில கடைகளில் சிலருக்கு வேஷ்டியும் சிலருக்கு சேலையும் மட்டும் கொடுத்து சமாளித்து வருகிறோம்.
அரசு 100 சதவீதம் வழங்கினால் மட்டுமே அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் வேட்டி சேலை வழங்க முடியும்,' என்றனர்.