எண்கள் சொல்லும் சேதி
ரூ.22,194 கோடி
1) அன்னிய பங்கு முதலீட்டாளர்கள், கடந்த 10ம் தேதி வரை, விற்ற இந்திய பங்குகளின் மதிப்பு இதுவாகும். 2ம் தேதியைத் தவிர 10ம் தேதி வரையிலான அனைத்து வர்த்தக நாட்களிலும் அன்னிய முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை திரும்ப பெற்றுக்கொண்டே இருந்தனர். டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவு, மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் மந்தநிலை, உலகளாவிய அரசியல் சூழல் உள்ளிட்ட காரணங்களினால், இந்திய பங்குகளில் முதலீடு செய்வதை, அன்னிய பங்கு முதலீட்டாளர்கள் கணிசமாக குறைத்துள்ளனர்.
2
) ரூ.47,600 கோடி
கடந்த 3ம் தேதியோடு முடிந்த வாரத்தில், நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு சரிவு தொகை இதுவாகும். இதையடுத்து, கையிருப்பு 53.94 லட்சம் கோடி ரூபாயாக உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கையிருப்பு குறைந்ததற்கு, வெளிநாட்டு கரன்சி மதிப்பு 54,400 கோடி ரூபாய் குறைந்ததே முக்கிய காரணமாகும். இதுவே, முந்தைய வாரத்தில், 54.42 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இதே காலத்தில், தங்க கையிருப்பு மதிப்பு 700 கோடி ரூபாய் அதிகரித்து, 5.70 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.