பள்ளியில் ஆண்டுவிழா கொண்டாட்டம் 

பொள்ளாச்சி,; பொள்ளாச்சி விஸ்வதீப்தி பள்ளியில், 'ஸ்பார்க் 25' என்ற தலைப்பில் ஆண்டு விழா நடத்தப்பட்டது. அருட்தந்தை சாஜூ ஷக்காலக்கல் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக, இந்தியன் இம்யூனாலஜிகல் நிறுவன நிர்வாக இயக்குநர் ஆனந்த்குமார், கலந்து கொண்டார்.

தொடர்ந்து, பள்ளியின் முதலாவது முதல்வர் பிரான்சிஸ் தைவலப்பில் கவுரவிக்கப்பட்டார். கல்வி, கலைகளில் சிறந்து விளங்கிய பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நடப்பாண்டு பணி ஓய்வு பெறும் அலுவலக ஊழியர்களான தாமஸ், திருமலைசாமி, மயிலாள் ஆகியோருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது.

மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. பள்ளி முதல்வர் அருட்தந்தை ஜாய்கரிப்பாய், தாளாளர் அருட்தந்தை ஆண்டனி கலியத், பொருளாளர் அருட்தந்தை நிமிஷ்சுண்டன்குழியில், ஆசிரியர் செயலாளர் ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement