டென்னிஸ்: காலிறுதியில் மாயா

சண்டிகர்: ஐ.டி.எப்., ஜூனியர் டென்னிஸ் ஒற்றையர் காலிறுதிக்கு மாயா ரேவதி முன்னேறினார்.
சண்டிகரில் ஜூனியர் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இத்தொடரின் 'நம்பர்-5' அந்தஸ்து பெற்ற இந்தியாவின் மாயா ரேவதி, பிரான்சின் இவா மரியேவை சந்தித்தார்.
சமீபத்தில் டில்லி தொடரில் கோப்பை வென்ற மாயா, முதல் செட்டை 6-3 என கைப்பற்றினார். தொடர்ந்து, அடுத்த செட்டையும் 6-2 என எளிதாக வசப்படுத்தினார். முடிவில் கோவையை சேர்ந்த மாயா, 6-3, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தார்.
இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் மாயா, ரஷ்யாவின் பொலினா ஜோடி, செர்பியாவின் ஜான்கோவிச், ரஷ்யாவின் அன்னா ஜோடியை 6-4, 6-2 என வென்று, அரையிறுதிக்கு முன்னேறியது.

Advertisement