கோவில் இடிப்பு இந்து முன்னணி கண்டனம்
சென்னை, சென்னை மாங்காடு அடுத்த கெருகம்பாக்கம் பகுதியில், சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது. கொளப்பாக்கம் சாலையில் உள்ள கற்பக விநாயகர் கோ வில் ஆக்கிரமிப்பில் இருப்பதாக கூறி, நெடுஞ்சாலை, வருவாய்த்துறை அதிகாரிகள், இரவோடு இரவாக, பொக்லைன் இயந்திரத்தை வைத்து, கோவிலின் முன்பகுதியை இடித்து அகற்றினர்.
காலையில் அங்கு வந்த பக்தர்கள், கோவிலின் முன் பகுதி இடிக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது தொடர்பாக, இந்து முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை கெருகம்பாக்கம் பகுதியில், சாலை அமைப்பதற்காக, அந்த பகுதியில் உள்ள கற்பக விநாயகர் கோவிலின் முன் பகுதியை அகற்ற, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், இரவோடு இரவாக இடித்து அகற்றி உள்ளனர்.
சாலை விரிவாக்க பணிகளை காரணம் காட்டி, கோவில்களை மட்டும் திட்டமிட்டு இடிக்கும் பணி தொடர்கதையாகி வருகிறது.
நெடுஞ்சாலைகளில் உள்ள கோவில்களை அகற்ற ஆர்வம் காட்டும் அதிகாரிகள், ஆக்கிமிப்பில் கட்டப்பட்டுள்ள சர்ச், மசூதிகளை கண்டு கொள்ளாமல் இருப்பது கண்டனத்திற்கு உரியது. கோவில்களை இடிக்குபோது கடைபிடிக்க வேண் டிய, சென்னை உயர் நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளை அதிகாரிகள் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.