சிரிலிக் எழுத்தை பயன்படுத்தி மோசடி: போலீசார் எச்சரிக்கை

சென்னை, இணையதள முகவரியில் பயன்படுத்தும், யு.ஆர்.எல்., பகுதியில், சிரிலிக் எழுத்துகளை பயன்படுத்தி, சைபர் குற்றவாளிகள் மோசடியில் ஈடுபட்டு வருவதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சைபர் குற்றப்பிரிவு, தலைமையக அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கை:

சைபர் குற்றவாளிகள், இணையதள முகவரியில் பயன்படுத்தப்படும், யு.ஆர்.எல்., பகுதியில், ''a, o,'' போன்ற சிரிலிக் எழுத்துகளை பயன்படுத்தி, பண மோசடி செய்ய முயற்சி செய்து வருகின்றனர்.

ஆகையால், உங்கள் மொபைல் போன் மற்றும் கம்ப்யூட்டர்களுக்கு வரும் குறுஞ்செய்தி மற்றும் வாட்ஸாப் உள்ளிட்ட செயலிகளுக்கு வரும் தகவல்களை மிக கவனமாக கையாள வேண்டும். சிரிலிக் எழுத்து பயன்படுத்தப்பட்டு உள்ளதா என, கட்டாயம் ஆய்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement