மாநில வாலிபால் போட்டி திருத்தணி அணி சாம்பியன்
திருத்தணி,திருத்தணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், எஸ்.ஆர்.சி.சி., மற்றும் எஸ்.எஸ்., நண்பர்கள் சார்பில், மாநில அளவிலான வாலிபால் போட்டி நேற்று முன்தினம் நடந்தது. இந்த போட்டிகளை திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன் துவக்கி வைத்தார்.
போட்டியில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருச்சி, ராணிப்பேட்டை, வேலுார் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மொத்தம், 27 அணிகள் பங்கேற்றன. பகல், இரவு நடந்த போட்டியில், ஒவ்வொரு அணியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. அதில், அதிக புள்ளிகள் பெற்ற, நான்கு அணிகள் தேர்வு செய்யப்பட்டன.
இந்த நான்கு அணிகளில், திருத்தணி எஸ்.ஆர்.சி.சி., - சென்னை போலீஸ் அணி ஆகிய இரண்டும் இறுதி போட்டியில் மோதின. திருத்தணி அணி சாம்பியன் வெற்றி பெற்று முதலிடமும், சென்னை போலீஸ் அணி இரண்டாவது இடமும் பிடித்தன.
முதலிடம் பிடித்த திருத்தணி அணி வீரர்களை பாராட்டி, திருத்தணி நகராட்சி தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் பூபதி கோப்பையை வழங்கி பாராடினர்.
நிகழ்ச்சியில், திருத்தணி நகராட்சி துணை தலைவர் சாமிராஜ், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் குமரவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.