குறள் ஒப்புவித்த மாணவர்களுக்கு பரிசு

திருப்பூர், : வான்புகழ் வள்ளுவன் கல்வி அறக்கட்டளை சார்பில், திருவள்ளுவர் தின விழா, பூண்டி காமாட்சி அம்மன் திருமண மண்டபத்தில் நடந்தது.

திருமுருகன்பூண்டி பேரூராட்சி முன்னாள் தலைவர் கோபால் தலைமை வகித்தார். அறக்கட்டளை செயற்குழு உறுப்பினர் வக்கீல் ருத்ரராஜ் வரவேற்றார்.

வான்புகழ் வள்ளுவன் கல்வி அறக்கட்டளை பொருளாளர் அண்ணாதுரை, வள்ளுவர் படத்துக்கு மாலை அணிவித்தார். பெரியாயிபாளையம், திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி வளர்ச்சிக்குழு செயலாளர் சிவசுப்ரமணியம், துவக்கி வைத்தார். பள்ளி உதவி தலைமையாசிரியர் இளங்கோ, அறிக்கை வாசித்தார்.

சிறப்பு விருந்தினராக, அம்மாபாளையம் பள்ளி முன்னாள் தலைமையாசிரியர் அருணாசலம் பங்கேற்றார். 1,330 குறள்களை முற்றோதல் செய்து, பன்முக திறமையில் அசத்தும் மாணவி ஓவியா, சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.

திருக்குறள் ஒப்புவித்தல் மற்றும் எழுத்துப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற, பெரியாயிபாளையம், பூண்டி, அம்மா பாளையம், பெரியார் காலனி, பெரியாயிபாளையம் அரசு பள்ளிகளை சேர்ந்த, 126 மாணவர்களுக்கு சான்றிதழ், ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

முதலிடம் பெற்ற, அம்மாபாளையம் பள்ளி மாணவி பிரிஸில்லா, பூவிதாஸ்ரீ, பெரியார் காலனி பள்ளி மாணவி ஸ்ரீநிதா ஆகியோருக்கு, ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. அறக்கட்டளை சார்பில், 3 அரசுப்பள்ளி, மற்றும் பூண்டி அங்கன்வாடி மையத்துக்கு, 36 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 4 பீரோ வழங்கப்பட்டன. அறக்கட்டளை செயலாளர் சிவகுமார் நன்றி கூறினார்.

Advertisement