காணும் பொங்கல் கூடுதலாக 500 பஸ்கள்
சென்னை, காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதலாக, 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என, மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
காணும் பொங்கல் பண்டிகை, இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, பொதுமக்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று வருவர்.
பொதுமக்கள் வசதிக்காக, சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாமல்லபுரம், கோவளம், எம்.ஜி.எம்., - வண்டலுார் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா, மெரினா கடற்கரை ஆகிய பகுதிகளுக்கு, மாநகர போக்குவரத்து கழகம் சார்பில், கூடுதலாக 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
பயணியரை பாதுகாப்பாக, பஸ்களில் இருந்து ஏற்றி இறக்கவும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், பணியில் சிறப்பு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பரிசோதகர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர் என, மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement