கல்லுாரி மாணவிக்கு பாராட்டு
கடலுார்: சிதம்பரத்தில் நடந்த பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போட்டியில் வெற்றி பெற்ற மாணவியை, சப் கலெக்டர் ராஷ்மிராணி பாராட்டினார்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில், கடந்த டிசம்பரில் பல்கலைக்கழகங்ளுக்கு இடையிலான மண்டல அளவிலான போட்டிகள் நடந்தது. இதில், அண்ணாமலை பல்கலைகழகத்தில் இரண்டாம் ஆண்டு பொறியியல் மாணவி திரன்யா மற்றும் மாணவிகள், கோ கோ போட்டியில் வெற்றி பெற்றனர். மாணவர்கள் திறன்வளர்ப்புக்குழு சார்பில், போட்டிகளில் சிறப்பான பங்களிப்பை செய்த 10 பேருக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. அதில் தேர்வான மாணவி திரன்யா உள்ளிட்ட 10 பேருக்கும், சிதம்பரம் சப் கலெக்டர் ராஷ்மிராணி ரொக்க பரிசு வழங்கி பாராட்டினார். மாணவர்கள் திறன்வளர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஞானகுமார் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement