பேரூர் படித்துறையில் பொங்கல் கொண்டாட்டம்
தொண்டாமுத்தூர் : பேரூர் படித்துறையில், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில், பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில், நீர் நிலைகளை காக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், ஆண்டுதோறும், நீர் நிலைகளில் பொங்கல் விழா கொண்டாடப்படும். அவ்வகையில், இந்தாண்டு, பொங்கல் விழா, நேற்றுமுன்தினம் மாலை, பேரூர் படித்துறையில் நடந்தது.
இதில், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து, நொய்யல் ஆற்றின் கரையில், மண் பானையில் பொங்கல் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து, தீப்பந்த சிலம்பாட்டம் மற்றும் கோலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement