வேளாண் மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம்

கடலுார் : கடலுார் அடுத்த அரியகோஷ்டியில் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் புல இறுதியாண்டு மாணவியர் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் புல இறுதியாண்டு ஜி-9 குழு மாணவியர், அரியகோஷ்டியில் ஊரக வேளாண் பணி அனுபவ பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதில், விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு, சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. அரியகோஷ்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களுடன் இணைந்து, கிராமத்தின் முக்கிய சாலைகளில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

குழு தலைவி ஹரீபா மற்றும் துணைத் தலைவி ஹரிணி ஒருங்கிணைத்தனர்.

Advertisement