வேளாண் கல்லுாரி மாணவி மரணம்: சி.பி.சி.ஐ.டி., விசாரிக்க மார்க்சிஸ்ட் கோரிக்கை

1

சென்னை: சிவகங்கை மாவட்டம் சேது பாஸ்கரா வேளாண் கல்லுாரி மாணவி பிரீத்தி தேவியின் மரணம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை: சிவகங்கை மாவட்டம் சேது பாஸ்கரா வேளாண் கல்லுாரி மாணவி பிரீத்தி தேவியின் மரணம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
மாடியில் இருந்து மாணவி கீழே விழுந்தது குறித்து கல்லூரி நிர்வாகம் ஏன் புகார் கொடுக்கவில்லை ?

மொட்டை மாடிக்கு செல்லும் கதவு எப்போதும் பூட்டப்பட்டிருக்கும். பிரித்திதேவிக்கு மாடிக்கு செல்லும் கதவை எப்படி திறந்தார். அவருக்கு சாவி எப்படி கிடைத்தது. விடுதியில் ஏன் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவில்லை.

கீழே விழுந்த மாணவியை கல்லூரி வாகனத்தில் காரைக்குடி மருத்துவமனைக்கு கொண்டு சென்றது ஏன் ? ஆம்புலன்சுக்கு ஏன் தகவல் சொல்லவில்லை. மதுரை மீனாட்சி மருத்துவமனைக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் ஏன் யாரும் வரவில்லை, பெற்றோரை ஏன் சந்திக்கவில்லை?

விசாரணை முடியும் முன்னரே, பிரித்திதேவியின் அம்மா திட்டுவார் அதனால் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கூறியது ஏன் ? பிரித்தியின் தந்தை செல்வக்குமாரிடம் ஏன் போலீசார் கட்டாயப்படுத்தி புகாரை எழுதி வாங்கினர்.மாணவியின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement