சாத்விக்-சிராக் ஜோடி ஏமாற்றம்
புதுடில்லி: இந்தியன் ஓபன் பாட்மின்டன் அரையிறுதியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி தோல்வியடைந்தது.
இந்திய ஓபன் 'சூப்பர் 750' பாட்மின்டன் தொடர் டில்லியில் நடக்கிறது. நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் அரையிறுதியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, மலேசியாவின் பெய் கோ, நுர் இஜுதின் ஜோடியை சந்தித்தது.
முதல் செட்டை 18-21 என இழந்தது இந்திய ஜோடி. இரண்டாவது செட்டிலும் சறுக்கிய இந்திய ஜோடி 14-21 என கோட்டை விட்டது. முடிவில் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி 18-21, 14-21 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement