தெ.ஆப்ரிக்கா, ஆஸி., கலக்கல் * ஜூனியர் 'டி-20' உலக கோப்பையில்...

பாங்கி: ஜூனியர் பெண்கள் 'டி-20' உலக கோப்பை முதல் போட்டிகளில் தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா வெற்றி பெற்றன.
மலேசியாவில், 19 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகளுக்கான 'டி-20' உலக கோப்பை தொடரின் இரண்டாவது சீசன், நேற்று துவங்கியது. 'நடப்பு சாம்பியன்' இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உட்பட 16 அணிகள், நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் லீக் முறையில் நடக்கின்றன.
நேற்று நடந்த 'டி' பிரிவு போட்டியில் ஆஸ்திரேலியா, ஸ்காட்லாந்து மோதின. முதலில் களமிறங்கிய ஸ்காட்லாந்து, 15.1 ஓவரில் 48 ரன்னுக்கு சுருண்டது. ஆஸ்திரேலிய அணி 6.4 ஓவரில் 49/1 ரன் எடுத்து, 9 விக்கெட்டில் வெற்றி பெற்றது.
இதே பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில் வங்கதேச அணி (53/5), நேபாளத்தை (52), 5 விக்கெட்டில் வென்றது. 'சி' பிரிவில் நடந்த போட்டியில் தென் ஆப்ரிக்க அணியிடம் (91/7), நியூசிலாந்து அணி (69/5) 22 ரன்னில் தோல்வியடைந்தது.
'பி' பிரிவில் நடந்த போட்டியில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து, 20 ஓவரில் 144/7 ரன் எடுத்தது. அயர்லாந்து 3.5 ஓவரில் 28/2 ரன் எடுத்த போது, மழை வர போட்டி ரத்து செய்யப்பட்டது. தவிர பாகிஸ்தான்-அமெரிக்கா, சமோவா-நைஜீரியா மோத இருந்த போட்டிகள் மழையால் ரத்தாகின.

இந்தியா-வங்கம் மோதல்
இந்திய அணி, 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ளது. இன்று கோலாலம்பூரில் நடக்கும், தனது முதல் போட்டியில், இந்திய அணி, வலிமையான வெஸ்ட் இண்டீசை எதிர்கொள்கிறது. ஆசிய சாம்பியன் ஆன இந்திய அணிக்கு, கேப்டன் நிக்கி உள்ளிட்டோர் கைகொடுக்கும் பட்சத்தில், தொடரை வெற்றியுடன் துவக்கலாம்.

Advertisement