ஹாக்கி: தமிழக டிராகன்ஸ் தோல்வி

ராஞ்சி: ஹாக்கி இந்தியா லீக் போட்டியில் தமிழக டிராகன்ஸ் அணி, 0-4 என தோல்வியடைந்தது.
ஹாக்கி இந்தியா லீக் 6வது சீசன் ராஞ்சியில் நடக்கிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் தமிழக டிராகன்ஸ், ஐதராபாத் டூபன்ஸ் அணிகள் மோதின. முதல் பாதியில் ஐதராபாத் வீரர் கொன்சாலோ (21) முதல் கோல் அடித்தார்.
இரண்டாவது பாதியில் ஆர்தர் (31), டிம் பிரான்ட் (33) தலா ஒரு கோல் அடிக்க, ஐதராபாத் ஆதிக்கம் செலுத்தியது. 48 வது நிமிடம் ஐதராபாத் வீரர் கொன்சாலோ, தனது இரண்டாவது கோல் அடித்தார்.
முடிவில் தமிழக டிராகன்ஸ் அணி 0-4 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. இத்தொடரில் தமிழக டிராகன்ஸ் நேரடியாக அடைந்த முதல் தோல்வி இது. முன்னதாக சூர்மா அணியிடம் 'ஷூட் அவுட்டில்' தோற்று இருந்தது.
இதுவரை விளையாடிய 7 போட்டியில், தமிழக டிராகன்ஸ் அணி, 5 வெற்றி, 2 தோல்வியுடன், 15 புள்ளி எடுத்து, பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. ஐதராபாத் (13) 2வது இடத்தில் உள்ளது.

Advertisement