அன்கிதா ஜோடி சாம்பியன்

புதுடில்லி: ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அன்கிதா ஜோடி சாம்பியன் ஆனது.
டில்லியில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா, பிரிட்டனின் நெய்தா பெய்ன்ஸ் ஜோடி, அமெரிக்காவின் ஜெசி அனே, ஜெசிக்கா பெய்ல்லா ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டை 6-4 என அன்கிதா ஜோடி கைப்பற்றியது. இரண்டாவது செட்டை 3-6 என நழுவவிட்டது. வெற்றியாளரை முடிவு செய்ய 'சூப்பர் டை பிரேக்கர்' நடந்தது. இதை அன்கிதா ஜோடி 10-8 என கைப்பற்றியது. முடிவில் அன்கிதா ஜோடி 6-4, 3-6, 10-8 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்று, சாம்பியன் ஆனது.

Advertisement