ஸ்வான் நிறுவன பங்குகள் நாளை முதல் வர்த்தகமாகும்
புதுடில்லி:நாளை முதல், மீண்டும் பங்குச் சந்தையில் வர்த்தகத்தை துவங்க இருப்பதாக, 'ஸ்வான் டிபன்ஸ் அண்டு ஹெவி இண்டஸ்ட்ரீஸ்' தெரிவித்து உள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய கப்பல் கட்டுமான நிறுவனமான ஸ்வான் டிபன்ஸ் அண்டு ஹெவி இண்டஸ்ட்ரீஸ், முன்னதாக 'ரிலையன்ஸ் நாவல் அண்டு இன்ஜினியரிங்' எனும் பெயரில் இயங்கி வந்தது.
கடந்தாண்டு, ஜனவரியில், ஸ்வான் எனர்ஜி நிறுவனம், இந்நிறுவனத்தின் நிர்வாகத்தை கைப்பற்றி, புதிய மறுமலர்ச்சி திட்டத்தை அறிவித்தது.
சமீபத்தில் இந்திய கடலோர கடற்படைக்காக 'ராஜ் ரத்தன்' எனும் விரைவு ரோந்து கப்பலை, திட்டமிட்ட காலத்திற்கு முன்னதாக ஸ்வான் நிறுவனம் வழங்கியிருந்தது.
இது குறித்து இந்நிறுவனத்தின் இயக்குனர் விவேக் மெர்ச்சன்ட் கூறியதாவது:
இந்திய பங்குச் சந்தையில், நாளை முதல் ஸ்வான் டிபன்ஸ் புதிய பயணத்தை துவங்குகிறது. உலகளவில் முன்னணி கப்பல் கட்டுமான நாடுகளில் ஒன்றாக இந்தியாவை மாற்றுவதே எங்கள் நோக்கம்.
இவ்வாறு கூறியுள்ளார்.