தேசியக்கொடி தயாரிப்பு பணி விறுவிறு

கோவை, : கோவையில் குடியரசு தினத்தை முன்னிட்டு, ராஜவீதியில் உள்ள கதர் ஸ்டோரில் தேசியக்கொடி தயாரிக்கும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது.

வரும், 26ம் தேதி நாட்டின் 76வது குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது.பள்ளி, கல்லுாரி, அலுவலகங்களில் ஏற்றப்படும் தேசியக்கொடி, கோவை காந்திஜி கதர் ஸ்டோரில் மொத்தமாக தயாரித்து வழங்கப்படுகிறது. இங்கிருந்து கேரளம், கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தின் போது, தேசியக்கொடி தயாரித்து அனுப்பப்படுகிறது.

காந்திஜி கதர் ஸ்டோர் நிர்வாகி கூறுகையில், ''சுதந்திரதினம் மற்றும் குடியரசு தினம் இரண்டுக்கும், இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே, ஆர்டர் கொடுத்து விடுவார்கள்.

''ஒரு வாரத்துக்கு முன்பாகவே தயாரித்து அனுப்பி விடுவோம். கதர் துணி, காட்டன் துணி மற்றும் 'சேட்டின்' துணிகளில் கொடிகள் தயாரிக்கிறோம். கொடியின் விலை, 25 முதல் 6,000 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement