ரோட்டோர மண் குவியலால் அபாயம்
போடி: போடி நகராட்சி, மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி பகுதியில் பாதாள சாக்கடை, கூட்டு குடிநீர் திட்ட பைப் லைன் அமைக்கும் பணியும், நெடுஞ்சாலைத் துறை ரோடு பணி போடி - தேவாரம் செல்லும் ரோடு, காமராஜ் பஜார் மெயின் ரோட்டில் நடந்தது. பணியின் போது எடுத்த மண் குவியல்களை ரோட்டோரத்தில் கொட்டினர். பணி முடிந்த பின் மண் குவியல் முழுவதும் அதற்றாமல் அப்படியே விட்டு சென்றதால், ரோட்டோரம் மண் குவியிலாக தேங்கி உள்ளன.
இதனால் வாகனங்கள் வேகமாக செல்லும் போது வெளியேறும் மண் தூசுகள் டூவீலரில் வருபவரின் கண்களில் விழுகிறது. வாகன விபத்தில் சிக்கி காயம் ஏற்படுதோடு, உயிர் பலியாகும் நிலை ஏற்படுகிறது. விபத்துகளை தவிர்க்க ரோட்டோரங்களில் தேங்கி உள்ள மண் குவியல்களை அகற்ற நெடுஞ்சாலைத் துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement