பள்ளி பஸ் டிரைவருக்கு அரிவாள் வெட்டு

தேனி: பள்ளபட்டி தெற்கு தெரு உதயராஜா 40. கெடுவிலார்பட்டி மெட்ரிக் பள்ளியில் பஸ் டிரைவர்.

இவர் 2 ஆண்டுகளுக்கு முன் பள்ளபட்டியில் உள்ள கோயில் விழா கமிட்டித் தலைவராக இருந்தபோது அதேப்பகுதி சந்தியநாதபுரம் தினேஷ் திருவிழா கூட்டத்தில் பட்டாசு வெடித்தார். இதை உதயராஜா கண்டித்துள்ளார். இந்த முன்விரோதத்தில், பள்ளப்பட்டி அரசு துவக்கப்பள்ளி அருகே அரிவாளால் உதயராஜா இடது கையில் வெட்டி கொலை மிரட்டல் விடுத்தார். உதயராஜா புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் தினேஷ் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Advertisement