டூவீலர் மீது பஸ் மோதி இளைஞர் பலி

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே டூவீலர் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் அஜித்குமார் 28 பலியானார்.

பெரியகுளம் ஒன்றியம், நல்லகருப்பன்பட்டி சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் 28. திருச்செங்கோட்டில் வேலை செய்து வந்தார். பெரியகுளத்தில் தனது தந்தை சேவியரை பார்ப்பதற்கு நேற்று முன்தினம் காலையில் திருச்செங்கோட்டிலிருந்து ஊருக்கு கிளம்பினார். இரவில் தேவதானப்பட்டி பைபாஸ் ரோடு பெட்ரோல் பங்க் அருகே டூவீலரில் செல்லும் போது, போடியிலிருந்து பெங்களூர் சென்ற அரசு பஸ் மோதியது.

இதில் காயமடைந்த அஜித்குமார் பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதனை செய்த டாக்டர் இறந்துவிட்டதாக தெரிவித்தார். தேவதானப்பட்டி போலீசார் விபத்து ஏற்படுத்திய திண்டுக்கல் மாவட்டம் சல்லையகவுண்டனூரைச் சேர்ந்த டிரைவர் தர்மவேலனிடம் 33. விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement