பள்ளி மாணவி மாயம்

ஆண்டிபட்டி: கதிர்நரசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் தனுஷ்கோடி 46, ஆட்டோ டிரைவரான இவரது 3 மகள்களில் மூத்த மகளுக்கு திருமணம் முடித்து விட்டார்.

இரண்டாவது மகள் யுவசத்யா 17, சக்கம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். தனுஷ்கோடி மனைவி தனது உறவினரை பார்ப்பதற்காக வெளியூர் சென்று விட்டார்.

ஜனவரி 14ல் தனது இரு மகள்களையும் மாமனார் வீட்டில் விட்டுவிட்டு தனுஷ்கோடி ஆட்டோ சவாரிக்கு சென்று விட்டார்.

மறுநாள் வந்து பார்த்தபோது யுவசத்யாவை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. புகாரின் பேரில் போலீசார்விசாரிக்கின்றனர்.

Advertisement