ஜல்லிக்கட்டு குளறுபடி ஆதாரமற்ற குற்றச்சாட்டு அமைச்சர் மூர்த்தி தகவல்
மதுரை: மதுரையில் நடந்த மூன்று ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளும் குளறுபடின்றி நடந்துள்ளது. அதை அரசியலாக்க வேண்டாம் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு போட்டிகள், அரசு அதிகாரிகளின்அர்ப்பணிப்பு, மக்கள் ஒத்துழைப்புடன் எவ்வித புகாரும் இல்லாமல் நடந்தது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் ஆன்லைன் பதிவில் குளறுபடி நடந்ததாக அ.தி.மு.க., ஆதாரமின்றி அரசியலுக்காக குற்றம் சாட்டுகிறது.
மொத்தம் 5 ஆயிரம் வீரர்கள், 12 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டகாளை உரிமையாளர்கள் ஆன்லைனில் பதிவு செய்தனர். 1200க்கும்மேற்பட்ட வீரர்கள், 2500க்கும் மேற்பட்ட காளைகள்களம் இறக்கப்பட்டனர்.
மாலை 6:00 மணிக்கு மேல் நடத்தக் கூடாது என்பதற்காக அவனியாபுரத்தில் மட்டும் சில காளைகள் நிறுத்தப்பட்டன. ஆனாலும் அவற்றின் உரிமையாளர்களுக்குபரிசுவழங்கி கவுரவிக்கப்பட்டது
அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டுக்கு முதல் நாள், சிலர் குழப்பத்தை ஏற்படுத்த அப்பகுதி மக்களை துாண்டிவிட்டு போராட்டத்தை தொடர முயற்சித்தனர்.
அதையும் அதிகாரிகள் முறியடித்தனர். இந்தாண்டு பல சவால்களுக்கு இடையே சர்ச்சையின்றி ஜல்லிக்கட்டுகள் நடத்தப்பட்டது.
இது மக்களுக்கு தெரியும் என்றார்.