கேட் கீப்பர் மீது தாக்குதல் மூவர் கைது

மதுரை: மதுரை பழைய விளாங்குடியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி 36. ரயில்வே கேட் கீப்பரான இவர், ஜன. 17ல் கூடல்நகர் - - கோவில்பாப்பாக்குடி ரயில்வே கேட்டில் பணியில் இருந்த போது சென்னை - கன்னியாகுமரி ரயிலுக்காக அதிகாலை 12:20க்கு கேட்டை மூடினார்.

அச்சமயம் காரில் வந்த 3 பேர் கேட்டை திறக்ககூறியும், கேட்டை உடைக்க முற்பட்டும் தகராறில் ஈடுபட்டனர். எச்சரித்த பாலசுப்பிரமணியை கற்களால் தலையை தாக்கிவிட்டு தப்பினர்.

இதுதொடர்பாக மேலஅனுப்பானடி ஹவுசிங்போர்டு சாமுவேல் 21, நித்திஷ் 22, நெடுங்குளம் பிரகதீஸ்வரனை 21, ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

Advertisement