கந்துவட்டி மிரட்டலால் வாலிபர் தற்கொலை: 2 பேர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே சேரன்மகாதேவி அருகே கந்துவட்டி கும்பல்மிரட்டலால் விஷம் குடித்த வாலிபர் இறந்தார். அவரை மிரட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேரன்மகாதேவி பூதத்தான்குடியிருப்பைச் சேர்ந்தவர் சிவபெருமாள்24. பிடெக் பட்டதாரி.தனியார் நிறுவன ஊழியர். ஆன்லைன் வியாபாரத்திற்காக ரூ.5 லட்சம் கடன் வாங்கினார். அதிக வட்டி கொடுக்க முடியாமல் திணறினார்.

களக்காடு சிதம்பராபுரம் சக்திகுமரன் 28, திருக்குறுங்குடி வெங்கடேஷ் 22, ஆகியோர் கடுமையாக அவரை பேசி மிரட்டினர். இதனால் சிவபெருமாள் விஷம் குடித்தார்.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் நேற்று இறந்தார். சக்திகுமரன், வெங்கடேஷை போலீசார் கைது செய்தனர்.

Advertisement