டில்லியில் கடும் பனிமூட்டம், குளிர்; 41 விரைவு ரயில்கள் சேவை பாதிப்பு

புதுடில்லி: டில்லியில் கடும் பனி மூட்டம் நிலவுவதால், 41 விரைவு ரயில்கள் சேவை பாதிக்கப்பட்டு உள்ளன.


தலைநகர் டில்லி, பஞ்சாப், ஹரியானா, ராஜேஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இன்று அதிகாலை முதலே கடுமையான பனிப்பொழிவு நிலவுகிறது. சாலையில் ஆள்நடமாட்டம் கூட தெரியாத அளவுக்கு பனிமூட்டம் இருந்தது.


டில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 9 டிகிரி செல்சியஸாக பதிவாகி உள்ளது. கடும் குளிர் காரணமாக மக்கள் வீட்டிற்குள்ளே முடங்கினர். 41 விரைவு ரயில்கள் சேவை பாதிக்கப்பட்டு உள்ளன.


லக்னோ மெயில், பத்மாவதி எக்ஸ்பிரஸ், வைஷாலி விரைவு ரயில் உள்ளிட்ட 41 ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.



எனவே, பயணிகள் ரயில்கள் புறப்படும் நேரத்தை அறிந்த பிறகு, பயணங்களை திட்டமிட வேண்டும் என ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

Advertisement