சாலை விபத்தில் நடிகர் பலி

மும்பை: மஹாராஷ்டிராவின் மும்பையில் நடந்த சாலை விபத்தில், பிரபல ஹிந்தி சீரியல் நடிகர் அமன் ஜெய்ஸ்வால், 23, உயிரிழந்தார்.

வட மாநிலங்களில் தனியார் 'டிவி' யில் ஒளிபரப்பான தர்திபுத்ரா நந்தினி என்ற ஹிந்தி சீரியலின் நாயகனாக நடித்தவர் அமன் ஜெய்ஸ்வால்.

மும்பையின் மேற்கே உள்ள ஜோகேஸ்வரி பகுதியில் அமன் ஜெய்ஸ்வால், நேற்று முன்தினம் மாலை பைக்கில் சென்றார். லாரி எதிர்பாராதவிதமாக, அமனின் பைக் மீது மோதியது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார்.

Advertisement