காச நோய் கண்டறியும் முகாம்

வடமதுரை: காச நோய் இல்லாத தமிழகம் 2025 என்ற இலக்கை அடைந்திட வழங்கப்பட்ட காசநோய் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் நேற்று அய்யலுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்தது.

இருமல், சளி, நாள்பட்ட சுவாச கோளாறு, காசநோய் கண்டறியும் சளி மாதிரி பரிசோதனை, நவீன எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. டாக்டர் பாலவிக்னேஷ் கூறுகையில், ''பரிசோதனை முடிவுக்கு ஏற்ப இங்கேயே தொடர்ந்து சிகிச்சை வழங்கப்படும்''என்றார். காசநோய் சிகிச்சை பிரிவு மேற்பார்வையாளர் ரஞ்சித்குமார், சுகாதார ஆய்வாளர் ஜெயக்குமார் பங்கேற்றனர்.

Advertisement