சின்னாளபட்டி பீரோ கம்பெனியில் தீ

சின்னாளபட்டி: சின்னாளபட்டி பீரோ தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மூலப்பொருட்கள் சேதமடைந்தன.

சின்னாளபட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே முத்துராஜ் சொந்தமான பீரோ தயாரிப்பு நிறுவனம் உள்ளது. பீரோவிற்கு பெயின்ட் பூசும் அறையில் பெயின்ட் படிமங்கள் அதிகமாக தேங்கி கிடந்துள்ளது.

பொங்கல் விடுமுறை முடிந்து நேற்று பணிக்கு வந்த பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

எதிர்பாராமல் பெயின்ட் படிமங்களில் பற்றிய தீ மூலப்பொருட்கள், கூரை உள்ளிட்ட பகுதி மர தளவாடங்களிலும் பற்றி எரிந்தது.

பீரோ நிறுவனத்தை அடுத்துள்ள சுங்குடி சேலை பிரின்ட் செய்யும் பட்டறையிலும் தீ பரவியது. அங்கிருந்த தொழிலாளர்கள் சேலைகளை அப்புறப்படுத்தியதால் பெருமளவு சேதம் தவிர்க்கப்பட்டது சின்னாளபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement