திருச்சி சாரதாஸில் பட்டுப்பிரிவு துவக்கம்..
மதுரை: திருச்சி சாரதாஸில் தை மாதப்பிறப்பை முன்னிட்டு புதிதாக பிரம்மாண்டமான பட்டுப் பிரிவு துவக்கப்பட்டுள்ளது.
'ஜவுளி சாம்ராஜ்யத்தின் அரசி' என அழைக்கப்படும் திருச்சி சாரதாஸ், தை மாதத்தை முன்னிட்டு தமிழர் கலாசாரத்திற்கும், உலகுக்கு உணவளிக்கும் உழவர்களை பெருமைப்படுத்தும் விதமாகவும், அவர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வாக 'வி.ஐ.பி., லாஞ்ச்' என்ற பெயரில் பிரம்மாண்ட பட்டு பிரிவை துவக்கியுள்ளது.
காஞ்சிபுரம், ஆரணி, பனாரஸ், திருப்புவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விதவிதமான ரகங்களில் பிரம்மிக்கத்தக்க நேர்த்தியான பட்டுப் புடவைகளை இப்பிரிவில் விற்பனைக்கு காட்சிப்படுத்தியுள்ளனர்.
சுபமுகூர்த்த பட்டு சேலைகளுக்கு 12 சதவீதம்தள்ளுபடி உண்டு.
தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலும் பிரத்யேகமாக ஆர்டர் செய்து பல வண்ணங்களில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பட்டுச் சேலைகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளனர்.
நிர்வாகத்தினர் கூறியதாவது: திருச்சி சாரதாஸ் பட்டுப் புடவைகளை அணிந்தவுடன் பெண்களின் மனதில் தன்னம்பிக்கையும், கம்பீரமும் இயல்பாக தோன்றும். விழாக்களும் பண்டிகைகளும் தமிழர் பாரம்பரியத்தில் ஒன்றிவிட்ட நிலையில், மக்களின் மனமறிந்து அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக, வியாபார நோக்குடன் இல்லாமல் வாடிக்கையாளர்களின் குடும்பத்தின் ஓர் அங்கமாக எங்கள் நிறுவனம் உள்ளது என்றனர்.