மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் துவங்கியது கும்பாபிஷேக விழா

பழநி: பழநி முருகன் கோயில் கட்டுப்பாட்டில் உள்ள பாத விநாயகர் கோயில் அருகே உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகத்திற்கான பூஜைகள் துவங்கின.

பழநி கிரிவீதி சன்னதி வீதி சந்திப்பில் பாத விநாயகர் கோயில் அருகே கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் சுவாமி கோயில் உள்ளது. இங்கு புனரமைக்கும் பணிகள் நடந்த நிலையில் கும்பாபிஷேகம் முகூர்த்த கால் ஊன்றும் நிகழ்ச்சி ஜன.3ல் நடைபெற்றது. கோயில் கும்பாபிஷேகம் ஜன.20ல் நடக்கிறது.

இதை முன்னிட்டு ஜன. 17ல் பிள்ளையார் வழிபாடு நடைபெற்றது. நேற்று காலை 7:45 மணிக்கு முதல் கால வேள்வி பூஜை துவங்கியது. இன்று காலை 8:00 மணிக்கு இரண்டாம் கால வேள்வி நடைபெறும். ஜன.20., அன்று நான்காம் கால வேள்வியுடன் காலை 10:15 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.

Advertisement