ஊராட்சிகளில் போயே போச்சு துப்புரவு பணிகள் முடக்கம்: பிரதிநிதிகள் பதவி காலம் முடிந்ததால் அசட்டை
வத்தலக்குண்டு: ஊராட்சிகளில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிந்ததால் துப்புரவு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. சிறப்பு அலுவலர்கள்தான் துாய்மை பணி தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
28 மாவட்டங்களில் ஊராட்சிகளில் உள்ள தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள தலைவர்கள் கவுன்சிலர்கள் பதவிக்காலம் ஜனவரி 5 முதல் முடிவடைந்தது. இதனால் சிறப்பு அலுவலர்களை நியமித்து தமிழக அரசு சட்டசபையில் சட்ட திருத்தம் மேற்கொண்டது.
அனைத்து ஊராட்சிகளுக்கும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தலைமையில் சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஊராட்சி செயலாளர்கள் மேற்பார்வையில் பணிகள் சிறப்பாக நடக்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இருப்பினும் பொங்கல் நாட்களில் துாய்மை பணியில் தொய்வு ஏற்பட்டதால் பல கிராமங்களில் சாக்கடைகள் துார்வாராமலும், குப்பை அள்ளாமலும் உள்ளது. இவை சுகாதார கேட்டிற்கு வழிவகுக்கின்றன.