மாவட்டத்தில் 90 அரசு பஸ்களுக்கு டிக்கெட் மெஷின் வழங்கல்

தேனி: மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு செல்லும் 90 அரசு பஸ்களுக்கு முதன்முறையாக டிக்கெட் வழங்கும் மெஷின் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு பஸ்களில் அதிக அளவிலான காகித பயன்பாட்டை குறைக்க டிக்கெட் வழங்கும் மெஷின்கள் பயன்பாட்டிற்கு வந்தன.

இந்த மெஷின்கள் மற்ற மண்டலங்களில் அதிக அளவில் பயன்பாட்டில் இருந்தது.

மதுரை மண்டலத்தில் மெஷின் பயன்பாட்டிற்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது.

பல ஆண்டுகளுக்குப்பின் தேனி மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களுக்கு டிக்கெட் வழங்கும் மெஷின் வழங்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் தேனி, பெரியகுளம், கம்பம் 1,2, தேவாரம், போடி, லோயர்கேம்ப் ஆகிய 7 டெப்போக்களில் இருந்து 248 பஸ்கள் வேறு மாவட்டங்களுக்கு இயக்கப்படுகிறது. இதில் 90 பஸ்களுக்கு முதற்கட்டமாக டிக்கெட் வழங்கும் மெஷின் வழங்கப்பட்டுள்ளது.

இது பற்றிஅரசு பஸ் கண்டக்டர்கள் கூறுகையில், ' அச்சடிக்கப்பட்ட டிக்கெட்டுகள் புழக்கத்தில் இருந்த போது ரூ.62 டிக்கெட்டிற்கு 2டிக் கெட் வழங்க வேண்டியிருந்தது. மெஷினில் டிக்கெட் வழங்குவதால் ஒரே டிக்கெட்டாக 4 பேருக்கும் சேர்த்து வழங்க முடியும். அனைத்து பஸ்களுக்கும் மெஷின் வழங்க வேண்டும்'. என்றனர்.

Advertisement