பஸ் மீது ஜீப் மோதி ஒருவர் காயம்

போடி: போடியில் இருந்து மூணாறுக்கு போடிமெட்டு வழியாக நேற்று மாலை அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. பூப்பறையில் இருந்து பயணிகளுடன் போடிக்கு அதிவேகமாக வந்த கேரளா ஜீப் அரசு பஸ்சின் முன் பகுதியில் மோதியது.

அருகே இருந்த தடுப்புச்சுவர் மீது பஸ் மோதி நின்றது.

பள்ளத்தில் கவிழாமல் பஸ் நின்றதால் பயணிகள் காயம் இன்றி தப்பினர். ஜீப்பில் பயணம் செய்த காஞ்சிபுரத்தை சேர்ந்த முதேஷ் 27, என்பவருக்கு காலில் பலத்தை காயம் ஏற்பட்டது.

பஸ் டிரைவர் முருகன் புகாரில் குரங்கணி போலீசார் ஜீப் டிரைவர் சக்திகுமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement