பென்னிகுவிக் பிறந்தநாள் விழா மாரத்தான் போட்டி
கூடலுார்: பெரியாறு அணையைக் கட்டிய பென்னிகுவிக் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, கூடலுார் மக்கள் மன்றம் சார்பில் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.
கூடலுார் வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து லோயர்கேம்ப் பென்னிகுவிக் மணிமண்டபம் வரையுள்ள 10 கி.மீ., தூரம் நிர்ணயிக்கப்பட்டது. போட்டிகள் ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக 2 பிரிவுகளில் நடத்தப்பட்டது. இன்ஸ்பெக்டர் வனிதாமணி துவக்கி வைத்தார்.
மக்கள் மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், துணைத் தலைவர் லோகேந்திரன் முன்னிலை வகித்தார். பொருளாளர் திலகர் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் புதுராஜா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். வீரர்களுக்கும் பாண்டியராஜன் நினைவாக பென்னிகுவிக் உருவம் பதித்த பனியன்களை ஆலோசகர் லோகநாயகி வழங்கினார். வேளாண் உதவி இயக்குனர் அசோகன் நினைவாக நினைவு கோப்பைகள் வழங்கப்பட்டது.
வெற்றி பெற்ற வீரர்களுக்கு செயலாளர் கஜேந்திரன், கவுரவத் தலைவர் தங்கராஜ், துணைச் செயலாளர் பூபேஷ் கண்ணன், செயற்குழு உறுப்பினர்கள் வாசிமலையான்,கொடியரசன், மகாராஜன், ஜெயக்குமார், சிவக்குமார், திரைப்பட இயக்குனர் ஸ்டாலின், உதவி வேளாண் இயக்குனர் தெய்வேந்திரன், வின்னர் ஸ்போர்ட்ஸ் உரிமையாளர் வின்னர் அலீம் ஆகியோர் பரிசு வழங்கினர். தடகளப் போட்டியில் சாதனை படைத்த இன்பத்தமிழன், கதிர், உடற்கல்வி இயக்குனர் கருத்தப்பாண்டி, கவுன்சிலர் கணேசன் ஆகியோர்களுக்கு விருது வழங்கப்பட்டது.