தேனி நகர்புற நலவாழ்வு மையம் மூடல் ஏமாற்றத்துடன் திரும்பிய நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பிய நோயாளிகள்

தேனி: தேனி நகர்புற நலவாழ்வு மையம் பணி நேரத்தில் பூட்டி செல்வதால் சிகிச்சைக்கு வந்த சில நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

தேனி பெரியகுளம் ரோட்டில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அருகே நகர்புற நலவாழ்வு மையம் ஒராண்டிற்கு முன் செயல்பாட்டிற்கு வந்தது. ஞாயிறு, அரசு விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் காலை 8:00மணி முதல் மதியம் 12:00 மணி வரையும், மாலை 4:00 மணி முதல் 8:00 மணி வரையும் செயல்படுகிறது. இங்கு தினமும் சளி, காய்ச்சலுக்கு, நுாறு பேர் வரை வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.ஜனவரி 13ம் தேதி காலை 10:30 மணிக்கு இந்த மையம் பூட்டப்பட்டிருந்தது. சிகிச்சைக்கு வந்த சிலரும் திரும்பி சென்றனர்.இதுபற்றி சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, 'நலவாழ்வு மையத்தில் டாக்டர், உதவியாளர் என இருவர் பணிபுரிகின்றனர். பணிக்கு வந்த டாக்டருக்கு உடல் நிலை சரியில்லாததால் உதவியாளருடன் வேறு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார். இதனால் நலவாழ்வு மையம் மூடப்பட்டது என்றனர். நலவாழ்வு மையம் பணி நேரத்தில் செயல்படுவதை சுகாதார துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என மக்கள் கோரியுள்ளனர்.

Advertisement